ராஷ்மிகா மந்தனா நடிக்கும் ‛தமா': தீபாவளிக்கு ரிலீசாகிறது | ஒரே மாதத்தில் கோட்டா சீனிவாசராவின் மனைவியும் மறைந்தார்! | சிக்கந்தர் தோல்வி: சல்மான்கான் மீது நேரடியாக குற்றம் சாட்டிய ஏ.ஆர்.முருகதாஸ்! | நெகட்டிவ் விமர்சனங்களால் ‛கூலி' வசூல் பாதிப்பா? திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | ஆபரேஷன் சிந்தூரில் வீர மரணம் அடைந்த முரளி நாயக் வாழ்க்கை சினிமாவாகிறது | அதிக வசூல் இயக்குனர்களில் முதலிடத்தில் லோகேஷ் கனகராஜ் | ஹீரோயின் ஆகும் ஆசை இல்லை: 'கூலி' மோனிகா பிளெஸ்சி | 'கேப்டன் பிரபாகரன்' படத்திற்காக வீரப்பனை சந்தித்தேன்: ஆர்.கே.செல்வமணி | பிளாஷ்பேக்: ரஜினி நடித்த 'ஏ' படங்கள் | பாடகர் வேடன் மீது குவியும் பாலியல் புகார்கள் |
மலையாளத்தில் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக முன்னணி இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் பிரியதர்ஷன். கடந்த வருடம் இவர் இயக்கத்தில் உருவாகி, தற்போது ரிலீசுக்கு தயாராக காத்திருக்கும் படம் 'மரைக்கார் ; அரபிக்கடலிண்டே சிம்ஹம்'. மோகன்லால் அர்ஜுன், சுனில் ஷெட்டி, பிரபு கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட, பல நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்த வரலாற்று படம் சமீபத்தில் கடந்த வருடத்திற்கான சிறந்த படத்திற்கான தேசிய விருது பெற்றது.
இந்த நிலையில் இயக்குனர் பிரியதர்ஷன் இந்த படத்திற்காக தனக்கு கிடைத்த விருதை ஷோலே பட இயக்குனர் ரமேஷ் சிப்பி மற்றும் இயக்குனர் டேவிட் லீன் ஆகியோருக்கு சமர்ப்பணம் செய்வதாக அறிவித்துள்ளார். மிகப்பெரிய பிரேம்களை எப்படி வைக்க வேண்டும் என, அவர்களிடமிருந்து தான் கற்றுக் கொண்டதாகவும், அதனாலேயே அவர்களுக்கு இந்த விருதை காணிக்கையாக்குவதாகவும் குறிப்பிட்டுள்ளார் இயக்குனர் பிரியதர்ஷன்.