தமிழுக்கு வரும் 'கொண்டல்' பிரதிபா | 'அன்னை இல்லத்தில் உரிமை இல்லை' : பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய ராம்குமாருக்கு கோர்ட் உத்தரவு | டிரைலருக்கு 'குட்' வரவேற்பு; படத்திற்கும் அப்படியே கிடைக்குமா? | ஒருங்கிணைந்து செயல்படுவோம் : தயாரிப்பாளர் சங்கத்திற்கு, நடப்பு தயாரிப்பாளர் சங்கம் அழைப்பு | அடுத்தடுத்து வரிசை கட்டும் படங்கள், ஆனாலும்…. | புதிய தொழிலாளர் சங்கத்திற்கு ஆள் சேர்க்கும் தயாரிப்பாளர் சங்கம் | பிளாஷ்பேக் : நடிகையாக இருந்து டப்பிங் கலைஞராக மாறியவர் | பிளாஷ்பேக்: விஸ்வாமித்ரரை காப்பாற்றிய என்.எஸ்.கிருஷ்ணன் | 50 கோடிக்கு பேரம் பேசும் சிவகார்த்திகேயனின் பராசக்தி | ஓடிடி டீலிங் முடிந்த இட்லி கடை : என்ன விலை தெரியுமா? |
வித்யாபாலன் நடித்த பாலிவுட் படமான சகுந்தலாதேவி ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியானது. இது இந்தியாவில் பிறந்த மனித கம்ப்பூட்டர் என்று அழைக்கப்பட்ட சகுந்தலாதேவியின் வாழ்க்கை வரலாற்று படம். ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பையும் பெற்றது. தற்போது வித்யாபாலன் நடித்த அடுத்த படமான ஷெர்னியும் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
டி சீரிஸ் தயாரிப்பில், நியூட்டன் திரைப்படத்தை இயக்கிய அமித் மசுர்கார் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். வித்யா பாலன், ஷரத் சக்ஸேனா, முகுல் சட்டா, விஜய் ராஸ் உள்ளிட்டோர் இதில் நடித்துள்ளனர்.
மனிதர்களால் வனங்களுக்கும், வன விலங்குகளுக்கும் ஏற்படும் பாதிப்பையும் அதை நீக்க நினைக்கும் நேர்மையான பாரஸ்ட் ஆபீசருக்கும் இடையிலான கதை. பாரஸ்ட் ஆபீசராக வித்யாபாலன் நடித்துள்ளார். வருகிற ஜூன் மாதம் வெளிவருகிறது.