பிளாஷ்பேக் : ஓவிய நாயகன் ஒளியின் நாயகனான பின்னணி | திரிசூலம், சூர்யவம்சம், விக்ரம் - ஞாயிறு திரைப்படங்கள் | ஏ.ஆர்.ரஹ்மான் வழக்கறிஞர் எச்சரிக்கை | ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் ‛ஸ்டார்' பட நடிகை | நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படப்பிடிப்பு நிறைவு பெற்றது | துப்பாக்கிய பிடிங்க : விஜய்யின் பெருந்தன்மை - சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | விஷ்ணு விஷால் படத்தில் நிகழ்ந்த மாற்றம் | புஷ்பா 2 டிரைலர் - தெலுங்கை விட ஹிந்திக்கு அதிக வரவேற்பு | அட்லியின் அடுத்த படம் : வெளியானது புதிய அப்டேட் | அஜித்தின் குட் பேட் அக்லி படப்பிடிப்பு விரைவில் முடிவடைகிறது |
அமேசன் நிறுவனத்தின் ஓடிடி தளத்தில் சமீபத்தில் வெளியான வெப் சீரிஸ் தாண்டவ். சைப் அலிகான், டிம்பிள் கபாடியா உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த சீரிசில் இந்துக்கள் மனதை புண்படுத்தும் காட்சிகள் இருப்பதாக புகார் எழுந்தது. இதை தொடர்ந்து உத்தர பிரதேசம் உள்பட பல மாநில உயர்நீதி மன்றங்களில் வழக்கு தொடரப்பட்டது.
தொடரில் நடித்தவர்கள், இயக்கியவர், தயாரித்தவர் மற்றும் அமேசான் நிறுவனத்தின் இந்திய ஊடக பிரிவு தலைவர் அபர்ணா புரோகில் ஆகியோர் மீது புகார் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தான் கைது செய்யப்படக்கூடாது என்று அபர்ணா புரோகில் உச்சநீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.
இந்த நிலையில் சர்ச்சைக்குரிய காட்சிகளை தாண்டவ் தொடரில் இருந்து நீக்கிவிட்டதாகவும், இதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதாகவும் அமேசன் நிறுவனம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
கற்பனை கதையை அடிப்படையாக கொண்ட தாண்டவ் தொடரில் சில காட்சிகள் பார்வையாளர்களின் மனதை புண்படுத்துவதாக எங்களுக்கு தெரியவந்தது. அந்த காட்சிகளை நீக்கி விட்டோம், சில காட்சிகளை எடிட் செய்து விட்டோம். நாங்கள் பார்வையாளர்களின் உணர்வுகளை மதிக்கிறோம். அவர்கள் மனம் புண்பட்டிருந்தால் அதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.