ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
பாலிவுட்டின் முன்னணி நடிகையாக வளம் வந்தாலும் கூட நடிகை ஆலியா பட்டுக்கு குழந்தை மனம் என்று தான் சொல்ல வேண்டும். கடந்த மாதம் ஐராபாத்திற்கு படப்பிடிப்புக்காக வந்த அவர், நடிகர் மகேஷ்பாபுவின் வீட்டுக்கு சென்று அவரது மகள் சிறுமி சித்தாராவை சந்தித்து பேசினார். அப்போது அவருக்கு தான் வாங்கிச்சென்றிருந்த ஆடையை பரிசளித்தார்.
இதோ இப்போது துல்கர் சல்மானின் மூன்று வயது மகளான மரியமுக்கு அழகழான ஆடைகளை கிப்ட் பார்சலாக அனுப்பி வைத்துள்ளார். அவர் அனுப்பி வைத்த ஆடைகளை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் துல்கர் சல்மான். துல்கரும் ஆலியாவும் இணைந்து படம் எதிலும் நடித்ததில்லை. மிகப்பெரிய பழக்கமும் இல்லை.. பின் ஏதற்காக கிப்ட் அனுப்பியுள்ளார் தெரியுமா..?
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் துல்கர் சல்மான் அளித்த ஒரு பேட்டியில், தனது மகளை ஆலியா பட் போல வளர்க்க போகிறேன் என கூறியிருந்தார். அந்த பேட்டியை ஏதேச்சையாக பார்த்த ஆலியா பட், துல்கர் சல்மானின் அந்த வார்த்தைகளில் நெகிழ்ந்து போய், அவரது மகளுக்கு ஆடைகளை பரிசாக அனுப்பி வைத்தாராம்.