ஏ.ஆர்.ரஹ்மான் வழக்கறிஞர் எச்சரிக்கை | ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் ‛ஸ்டார்' பட நடிகை | நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படப்பிடிப்பு நிறைவு பெற்றது | துப்பாக்கிய பிடிங்க : விஜய்யின் பெருந்தன்மை - சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | விஷ்ணு விஷால் படத்தில் நிகழ்ந்த மாற்றம் | புஷ்பா 2 டிரைலர் - தெலுங்கை விட ஹிந்திக்கு அதிக வரவேற்பு | அட்லியின் அடுத்த படம் : வெளியானது புதிய அப்டேட் | அஜித்தின் குட் பேட் அக்லி படப்பிடிப்பு விரைவில் முடிவடைகிறது | சூர்யாவின் கர்ணா ஹிந்தி படம் டிராப்பா? | டில்லியில் சிறிய அளவில் பிறந்தநாள் கொண்டாடிய நயன்தாரா |
கொரோனா காலத்திற்கு பிறகு தியேட்டர் திறக்கப்பட்டாலும் மக்கள் தியேட்டருக்கு வரத் தயங்கினார்கள். அந்த நிலையை மாற்றியது விஜய்யின் மாஸ்டர். படத்தை தியேட்டரில் தான் வெளியிட வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்த விஜய், இதற்காக முதல்வரையும் சந்தித்தார். திட்டமிட்டபடி படம் தியேட்டரில் வெளியாகி நல்ல வசூலையும் கொடுத்துள்ளது.
இதே போன்றுதான் பாலிவுட்டிலும் பிரச்சினை நிலவுகிறது. மக்கள் தியேட்டருக்கு வர ஆர்வம் காட்டாத நிலையில் பெரிய ஹீரோக்கள் தங்கள் படங்களை தியேட்டரில் வெளியிட தயக்கம் காட்டி வருகிறார்கள். ஆனால் மாஸ்டர் தந்த உற்சாகத்தில் சல்மான்கான் தான் நடித்து வரும் ராதே படம் தியேட்டரில் தான் வெளிவரும் என்று அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அத்தனை திரையரங்க உரிமையாளர்களுக்கும் பதில் சொல்ல நான் அதிக நேரம் எடுத்துக் கொண்டதற்கு மன்னிக்கவும். இந்தக் காலகட்டத்தில் இது மிகப்பெரிய முடிவு. திரையரங்க உரிமையாளர்கள் என்ன மாதிரியான நிதிப் பிரச்சினைகளில் இருக்கிறார்கள் என்பது எனக்குப் புரிகிறது. ராதே படத்தை திரையரங்குகளில் வெளியிடுவதன் மூலமாக அவர்களுக்கு உதவ நினைக்கிறேன்.
அதற்குக் கைமாறாக, ராதே படத்தைப் பார்க்க வரும் ரசிகர்கள் மீது உச்சபட்ச அக்கறையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அவர்கள் மேற்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். படம் 2021 ஈகைத் திருநாள் அன்று (மே 14) வெளியாகும். ராதே படத்தை இந்த வருடம் ஈகைத் திருநாள் அன்று திரையரங்குகளில் பார்த்து ரசியுங்கள். நம்பிக்கையுடன் இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
ராதே படத்தை பிரபுதேவா இயக்கி உள்ளார். மேகா ஆகாஷ், திஷா படானி, பரத் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். வெடரன் என்கிற தென் கொரியத் திரைப்படத்தின் அதிகாரபூர்வ ரீமேக் இது. இந்தப் படம் கடந்த வருடம் வெளியாகத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், கரோனா அச்சுறுத்தலால் படப்பிடிப்பு தள்ளிப்போனதால் அக்டோபர் மாதத்தில்தான் படப்பிடிப்பு முடிந்தது. தற்போது இறுதிகட்ட பணிகள் நடந்து வருகிறது.