என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
அமேசான் ப்ரைம் செயலியில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான வெப் சீரிஸ் 'தாண்டவ்'. சைப் அலி கான், டிம்பிள் கபாடியா, சுனில் க்ரோவர் உள்ளிட்டோர் நடித்துள்ள இதில் இந்து மதத்தை தவறாக சித்தரித்துள்ளதாக புகார்கள் எழுந்தன.
'தாண்டவ்' வெப் சீரிஸை தடைசெய்யக் கோரி போராட்டம் வலுத்து வருகிறது. இதுகுறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளதுடன், மத்திய தகவல் மற்றும் தொலைத்தொடர்புதுறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கும் கடிதங்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.
இதனையடுத்து தாண்டவ் வெப் சீரிஸின் இயக்குநர் அலி அப்பாஸ், கதாசிரியர் கௌரவ் சொலாங்கி, தயாரிப்பாளர் ஹிமான்ஷு கிருஷ்ணா உட்பட பலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அமேசான் தளத்திடம் மத்திய தகவல் மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சகம் இது குறித்து விளக்கம் கேட்டுள்ளது.
இந்நிலையில், தாண்டவ் படத்திற்கு எதிரான மும்பையில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. மும்பையில் உள்ள அமேசான் அலுவலகத்தை முற்றுகையிட்டு பாஜவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். எனவே தாண்டவ் வெப் சீரிஸ் தடை செய்யப்படும் சூழல் உருவாகியுள்ளது.