செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் |
இந்தியில் அமிதாப் பச்சனை வைத்து 'பா', 'சீனிகம்' என வித்தியாசமான படங்களை இயக்கி கவனம் ஈர்த்தவர் இயக்குனர் பால்கி. அதன்பிறகு அமிதாப் பச்சனையும் தனுஷையும் இணைத்து இந்தியில் 'ஷமிதாப்' என்கிற படத்தை இயக்கினார் பால்கி. மேலும் அக்சய் குமாரை வைத்து 'பேடு மேன்' என்கிற படத்தை இயக்கிய பால்கி, கடைசியாக மிஷன் மங்கள் படத்திற்கு கதையும் எழுதியிருந்தார்.
இந்தநிலையில் அவர் அடுத்தததாக இயக்கவுள்ள படத்தில் கதாநாயகனாக துல்கர் சல்மான் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை பால்கி இயக்கிய படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு, இருக்கை நுனியில் அமரவைக்கும் த்ரில்லர் படமாக இது உருவாக இருக்கிறதாம். இதற்கான கதையையே இந்த ஊரடங்கு காலத்தில் தான் எழுதினாராம் பால்கி. ஏற்கனவே கார்வான், தி சோயா பேக்டர் என இரண்டு இந்திப்படங்களில் நடித்துள்ள துல்கர் சல்மானுக்கு இந்தியில் இது மூன்றாவது படமாகும்.