மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை |
கொரோனா தாக்கம் துவங்கியதில் இருந்து பாதிக்கப்பட்ட பலவேறு மக்களுக்கு தனது சொந்த பணத்தில் இருந்து கோடிகளை செலவு செய்து உதவி வருகிறார் வில்லன் நடிகர் சோனு சூட். தொடர்ந்து உதவிகள் செய்தே பழகிவிட்டதாலோ என்னவோ, அதை வழக்கமாகவே மாற்றிக்கொண்டு விட்ட சோனு சூட், தற்போது, தான் நடித்துவரும் ஆச்சார்யா படக்குழுவினர் 100 பேருக்கு ஸ்மார்ட்போன் வழங்கி அவர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
கொரோனா தாக்கம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டிருந்த ஆச்சார்யா படத்தின் படப்பிடிப்பு கடந்த நவம்பர் மாதம் மீண்டும் துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் பணியாற்றிய படக்குழுவினர் அனைவரும் வீட்டுக்கு செல்லாமலேயே கடந்த இரண்டு மாதங்களாக பணியாற்றி வருகின்றனர். இதனை தெரிந்துகொண்ட சோனு சூட், அவர்களின் அர்ப்பணிப்பை பாராட்டும் விதமாகவும் அவர்களை உற்சாகப்படுத்தும் விதமாகவும் விலையுயர்ந்த ஸ்மார்ட்போனை பரிசாக கொடுத்து நெகிழ வைத்துள்ளார்.