காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் | தீபாவளி புக்கிங் ஆரம்பம்: மழையால் மிரளும் திரையுலகம் | மக்கள் திட்டாதது நம்பிக்கையை கொடுத்தது: ஹரிஷ் கல்யாண் | விக்ரம் உடன் முதல்முறையாக இணையும் அனிருத் | ஹிந்தியில் ரீ-மேக் ஆகும் ‛சங்கராந்திகி வஸ்துனம்' : அக் ஷய் நடிக்க வாய்ப்பு | நவம்பர் 28ல் ரீ-ரிலீஸ் ஆகும் ‛அஞ்சான்' | பிளாஷ்பேக்: ஏ வி எம் - விஜயகாந்த் கூட்டணியின் முதல் வெற்றித் திரைப்படம் “சிவப்பு மல்லி” | எங்கேயும் போக மாட்டேன், 13 வருட காத்திருப்பு போதும் : இயக்குனருக்கு உறுதி அளித்த பார்வதி | ரஜினி, தனுஷுக்கு அடுத்ததாக பிரதீப் ரங்கநாதனை பார்க்கிறேன் ; நாகார்ஜுனா |
சமூக வலைத்தளங்கள் நாளுக்கு நாள் எங்கேயோ போய்க் கொண்டிருக்கின்றன. மக்களிடையே, நெகட்டிவிட்டியான விஷயங்கள் அதிகமாவதற்கும் அவை ஒரு காரணமாக இருக்கின்றன. எதை செய்யலாம், எதை செய்யக்கூடாது என்ற வரைமுறை சமூக வலைத்தளங்களில் பலருக்கும் இல்லை. எதை வேண்டுமானாலும் பதிவிடலாம் என்பது சில பிரபலங்களிடமும் உள்ளது.
சினிமா நடிகைகளைப் பொறுத்தவரை பலரும் அவர்களது புகைப்படங்களைப் பதிவிட்டு தங்கள் பாலோயர்களை அதிகப்படுத்துவதில் கவனமாக இருப்பார்கள். குறிப்பாக சிலர் கிளாமர் மற்றும் கவர்ச்சி புகைப்படங்களை அதிகம் பதிவிடுவார்கள். அப்படிப்பட்ட நட்சத்திரங்களுக்குத்தான் சமூக வலைத்தளங்களில் பாலோயர்களும் அதிகம்.
தனது கிளாமர் மற்றும் கவர்ச்சிகரமான நடிப்பால் பல ரசிகர்களைக் கவர்ந்தவர் சன்னி லியோன். அவரது சமூக வலைத்தளங்களில் விதவிதமான புகைப்படங்களைப் பதிவிடுபவர். இரு தினங்களுக்கு முன்பு பாத்ரூமில், பாத்டப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பதிவிட்டு ஆச்சரியப்படுத்தி உள்ளார். நல்ல வேளையாக குளிப்பது போன்ற புகைப்படங்களைப் பதிவிட்டு அதிர்ச்சிப்படுத்தவில்லை.