சைலண்ட் ஆக 25 நாளில் 'ஆண்பாவம் பொல்லாதது' | சினிமா டூ அரசியல் : பாலிவுட்டின் ‛ஹீ மேன்' தர்மேந்திராவின் வாழ்க்கை பயணம் | ஹிந்தி நடிகர் தர்மேந்திரா காலமானார் | தளபதி திருவிழா : விஜய்க்காக களமிறங்கும் பிரபல பாடகர்கள் | 100 கோடிக்கு மேல் விற்கப்பட்டதா 'ஜனநாயகன்' ? | ரூ.10 கோடி டெபாசிட் செய்ய விஷாலுக்கு கோர்ட் உத்தரவு | விஜய் சேதுபதி, பூரி ஜெகன்னாத் படத்தின் படப்பிடிப்பு நிறைவு | ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு கீர்த்தி சுரேஷ் படம் | தெரு நாய்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த நிவேதா பெத்துராஜ் | 2025 : 11 மாதங்களில் 250ஐக் கடக்கும் தமிழ்ப் பட வெளியீடுகள் |

நடிகை கங்கனா ரணாவத் சமூக வலைத்தளங்களில் சுறுசுறுப்பாக இயங்குகிறவர். மனதில்பட்ட கருத்துக்களை துணிச்சலுடன் பேசக்கூடியவர். இதனால் அவ்வப்போது சில சிக்கல்களையும் சந்திப்பார். ஆனால் அதைப்பற்றியெல்லாம் கவலைப்பட மாட்டார்.
டில்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டம் குறித்து கங்கனா வெளியிட்ட சில கருத்துக்கள் இரு சமூகத்தினர் இடையே வன்முறையை தூண்டும் வகையில் இருப்பதாக காஸ்டிங் இயக்குனர் முனாவர் அலி செய்யது என்பவர் மும்பை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிமன்றம் கங்கனா ரணாவத் மற்றும் அவரது சகோதரி மீது வழக்குப்பதிவு செய்ய பாந்திரா போலீசாருக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து பாந்திரா போலீசார் தேசத்துரோகம், மோதலை தூண்டும் வகையில் பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நடிகை கங்கனா ரணாவத் மற்றும் அவரது சகோதரி ரங்கோலி மீது வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக நடிகை கங்கனா ரணவத்திற்கு மும்பை போலீசார் 3 முறை சம்மன் அனுப்பினர். ஆனால் அவர் ஆஜராகவில்லை. இதனால் அவர் கைது செய்யப்படும் சூழ்நிலை உருவானது.
இந்தநிலையில் அவர் பாந்திரா போலீஸ் நிலையத்திற்கு நேற்று விசாரணைக்கு வந்தார். அவருக்கு மத்திய அரசின் ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. கங்கனா ரணவத்திடம் போலீசார் சுமார் 2 மணி நேரம் விசாரணை நடத்தினர்.