காஞ்சனா 4 படத்தில் ராஷ்மிகா மந்தனா? | ரஜினி - கமலை இணைத்து படம் இயக்க ஆசைப்படும் கே.எஸ்.ரவிக்குமார் | என்னை பிரபலப்படுத்தாதீங்க... : அஜித் பேச்சு | சினிமாவில் பாலகிருஷ்ணா 50 : வாழ்த்திய ரஜினி | சமோசா மீது எனக்கு தனி லவ் : தமன்னா | ஜெயிலர் 2 பற்றி ஓவராக பேசி ஹைப் ஏற்ற விரும்பவில்லை : நெல்சன் | மாதம்பட்டி ரங்கராஜ் கொஞ்சி பேசும் வீடியோவை வெளியிட்ட ஜாய் கிரிசில்டா | அஜித் 64வது படம் தாமதமாகிறது...? | முதல் குழந்தை வீட்டிற்கு வருவதற்கு முன் ஆறு குழந்தைகளை பறிகொடுத்தேன் : சன்னி லியோன் | மோகன்லால் படத்தை விட கல்யாணியின் படம் காட்சிகள் அதிகரிப்பு |
பிரபல பாலிவுட் நடிகை பிராச்சி டெஹ்லான்.. மம்முட்டி நடிப்பில் கடந்த 2019ல் வெளியான மாமாங்கம் என்கிற வரலாற்று படத்தில் கதாநாயகியாக நடித்த பிராச்சி டெஹ்லான், கடந்த சில மாதங்களுக்கு முன் ரோஹித் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்தநிலையில் மாமாங்கம் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக, சிறந்த நடிகைக்கான, மறைந்த நடிகர் கலாபவன் மணியின் நினைவு விருது இவருக்கு வழங்கப்பட்டது.
இந்த விருதை பெறுவதற்காக கேரளா வந்திருந்த பிராச்சி டெஹ்லான், கேரளாவை சுற்றி பார்தததுடன் கொச்சி மெட்ரோ ரயிலிலும் பயணித்து அந்த புகைப்படங்களை தனது சோஷியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மாமாங்கம் படத்தில் நடித்ததை தொடர்ந்து, மோகன்லால்-ஜீத்து ஜோசப் கூட்டணியில் உருவாகும் ராம் படத்தில் இவரை நடிக்க அழைத்தபோது தனக்கு முக்கியத்துவம் இல்லாத கதாபாத்திரம் என கூறி நடிக்க மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.