மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
13வது சர்வதேச இந்திய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா சிங்கப்பூரில் கோலாகலமாக நடந்தது. இதில் ராக்ஸ்டார் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான விருது ரன்பீர் கபூருக்கும், தி டர்ட்டி பிக்சர்ஸ் படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருது வித்யாபாலனுக்கும், சிங்கம் படத்திற்காக சிறந்த வில்லன் நடிகருக்கான விருது பிரகாஷ்ராஜூக்கும் வழங்கப்பட்டது. மேலும் வாழ்நாள் சாதனையாளர்கள் விருது நடிகை ரேகா மற்றும் தயாரிப்பாளரும், டைரக்டருமான ரமேஷ் ஷிப்பிக்கு வழங்கப்பட்டது. பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ராவின் தங்கை ப்ரனீதா சோப்ராவுக்கு சிறந்த புதுமுகம் மற்றும் சிறந்த துணை நடிகை ஆகிய இரண்டு விருதுகள் கிடைத்தது.
விழாவில் விருது பெற்றவர்களின் பட்டியல்...
சிறந்த படம் - ஜிந்தகி நாமிலேகி தோப்ரா
சிறந்த நடிகர் - ரன்பீர் கபூர் (ராக்ஸ்டார்)
சிறந்த நடிகை - வித்யாபாலன் (தி டர்ட்டி பிக்சர்ஸ்)
சிறந்த டைரக்டர் - ஜோயா அக்தர் (ஜிந்தகி நாமிலேகி தோப்ரா)
சிறந்த துணை நடிகை - ப்ரனீதா சோப்ரா (லேடீஸ் வெஸ் ரிக்கி பால்)
சிறந்த துணை நடிகர் - பராகான் அக்தர் (ஜிந்தகி நாமிலேகி தோப்ரா)
சிறந்த புதுமுக நடிகை - ப்ரனீதா (லேடீஸ் வெஸ் ரிக்கி பால்)
சிறந்த புதுமுக நடிகர் - வித்யூத் ஜம்வால் (போர்ஸ்)
சிறந்த வில்லன் நடிகர் - பிரகாஷ் ராஜ் (சிங்கம்)
சிறந்த நகைச்சுவை நடிகர் - ரித்தேஷ் தேஷ்முக் (டபுள் தமால்)
வாழ்நாள் சாதனையாளர் விருது - ரேகா மற்றும் ரமேஷ் ஷிப்பி
கிரீன் விருது - தியா மிர்ஷா
சிறந்த இசையமைப்பாளர் - ஏ.ஆர்.ரஹ்மான் (ராக்ஸ்டார்)
சிறந்த பின்னணி பாடகி - ஸ்ரேயா கோஷல் (பாடிகார்ட்)
சிறந்த பின்னணி பாடகர் - மோகித் சவான் (ராக்ஸ்டார்)
முன்னதாக இந்த விழாவில் பாலிவுட் நட்சத்திரங்களின் நடனம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் ஏராளமான பாலிவுட் மற்றும் கோலிவுட்டை சேர்ந்த திரை நட்சத்திரங்கள் பங்கேற்றனர்.