சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! |
தமிழில் படவாய்ப்புகள் இல்லாவிட்டாலும் இந்தியில் தனது நடிப்பின் மூலம் உச்சத்தில் உள்ளார் நடிகை அசின். இந்தியில் அவர் நடிப்பில் வெளியான கஜினி, ரெடி, ஹவுஸ்புல் ஆகிய 3 படங்களும் ரூ. 100 கோடிக்கு மேல் வசூல் ஈட்டியுள்ளன. அடுத்த படமான போல்பச்சன் படம் ஜூலை 6ம்தேதி ரிலீசாகிறது. இதனால் இந்தியில் அவரது மார்க்கெட் அதிகரித்துள்ளது. அடுத்ததாக அக்ஷய்குமார் ஜோடியாக கில்லாடி 786 என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இது தவிர 2 ஸ்டேட்ஸ் படமும் கைவசம் உள்ளது. திடீரென இந்தியில உச்சத்தை எட்டியுள்ளதால் அசின் மீது சக இந்தி நடிகைகள் பெறாமைப்படுவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அசின் அளித்துள்ள பேட்டியில், நான் எந்த நடிகைக்கும் போட்டியாக இல்லை. அதுபற்றி சிந்திக்கவும் இல்லை. சினிமாவில் நல்ல கேரக்டர்களில் நடித்து வருகிறேன். ரசிகர்களிடம் இருந்தும் பாராட்டுகள் கிடைக்கிறது. இந்த நிலையில் போட்டி பற்றி நான் சிந்திக்கவே இல்லை. மற்ற நடிகைகளைவிட நான் திறமையான நடிகை என்று நிரூபிப்பதற்காக சினிமாவுக்கு வரவில்லை, என்று கூறியுள்ளார்.