மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
பாலிவுட்டில் தற்போது நடிகர் ஷாருக்கான் நடித்துள்ள படம் ஜீரோ. இந்த படத்தை ஆனந்த் எல் ராய் இயக்கி வருகிறார். ஷாருக்கான் ஜோடியாக கத்ரினா கைப் மற்றும் அனுஷ்கா சர்மா நடித்துள்ளனர். ஷாருக்கான் குள்ள மனிதராக நடித்திருக்கிறார். அதுமட்டுமல்ல இந்த படத்தில் முக்கிய வேடங்களில் மாதவனும் அபய் தியோலும் நடித்திருக்கிறார்கள்
இதில் நாயகி அனுஷ்காவின் வாழ்க்கையில் சம்பந்தப்பட்ட ஒரு கதாபாத்திரமாக வந்து செல்கிறாராம் மாதவன், இதற்கு முன் தனு வெட்ஸ் மனு படத்தில் ஆனந்த் எல்.ராயுடன் மாதவன் பணிபுரிந்துள்ளார். அதேபோல அவரது ராஞ்சனா படத்தில் தனுஷுடன் சேர்ந்து இன்னொரு ஹீரோவாக முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் அபய் தியோல். இந்த நட்பின் அடிப்படையில் தற்போது இவர்கள் இருவரும் ஜீரோ படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க ஒப்புக்கொண்டார்களாம்.