மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, நடிப்பில் மட்டும் அல்ல பாட்டு பாடுவதிலும் கெட்டிக்காரராம். அவரது இசை ஆர்வம் சமீபகாலமாக மேலோங்கி நிற்பதால், அம்மணி மியூசிக் ஆல்பம் ஒன்றை தயாரித்து வருகிறார். அதில் அவரே பாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மியூசிக் ஆல்பத்தின் பணிகளுக்காக அவர் தற்சமயம் லாஸ் ஏஞ்சல்சில் முகாமிட்டிருக்கிறார்.
இதற்கிடையில் பிரியங்காவின் புதிய அவதாரம் பற்றி அறிந்து கொண்ட பாலிவுட் உலகம் அவரை நிறைய பாடல்களை பாட வைக்க முயற்சி செய்து வருகிறதாம். லேட்டஸ்டாக பிரியங்காவை அணுகியிருப்பது, கிரிஷ் 3 படத்தில் பாட வேண்டும் என படத்தை தயாரிக்கும் ராகேஷ் ரோஷன் ( ரித்திக் ரோஷனின் தந்தை) என்கிறது விவரமறிந்த வட்டாரம். பிரியங்கா புது ரோலை எப்படி எடுத்துக்கொள்கிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!