விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
தமிழ்த் திரையுலகத்தில் அறிமுகமாகி, தெலுங்கிலும் சாதித்து, ஹிந்திக்குச் சென்று நம்பர் 1 நடிகையாகி, இந்தியத் திரையுலகின் கனவுக்கன்னி ஆகவும் திகழ்ந்தவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி. 54 வயதிலேயே திடீரென மரணமடைந்து திரையுலகத்தையும், ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியவர்.
ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் நாயகியாக அறிமுகமாகியுள்ள 'தடக்' படம் இன்று உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகியுள்ளது. தன் ஆசை மகள் நடிகையாக அறிமுகமான முதல் படத்தைப் பார்க்க முடியாமலேயே ஸ்ரீதேவி மறைந்துவிட்டார். தன்னைப் போலவே தன் மகளும் பெரிய நடிகையாக வேண்டும் என்று ஸ்ரீதேவி கனவுடன் இருந்தார் என்று சொன்னார்கள்.
'தடக்' படத்தின் முதல் நாள் படப்பிடிப்பு நடந்த போது ஸ்ரீதேவியும் கலந்து கொண்டார். அதன்பின் படத்தின் சில காட்சிகளை மட்டும் ஸ்ரீதேவி பார்த்திருக்கிறார்.
அம்மாவின் ஆசைப்படி நடிகையாக அறிமுகமாகியுள்ள ஜான்வியும், அம்மா ஸ்ரீதேவி, தன் படத்தைப் பார்க்காமல் மறைந்தது குறித்து மிகவும் வருத்தத்தில்தான் இருப்பார். இன்று வெளியாகியுள்ள 'தடக்' படத்தைப் பார்த்த ரசிகர்கள், விமர்சகர்கள் பலரும் ஜான்வியின் நடிப்பைப் பாராட்டி வருகின்றனர்.