விஜய்சேதுபதியா... துருவ் விக்ரமா... மணிரத்னம் சாய்ஸ் யார்? | விஷால் இயக்கி நடிக்கும் 'மகுடம்' படப்பிடிப்பு நிறைவு | ரஜினி படத்தை தனுஷ் இயக்குவாரா? | ப்ரண்ட்ஸ் ரீ ரிலீஸ் விழா : படக்குழு ஆப்சென்ட் | 'வாரணாசி' முன்னோட்ட வரவேற்பு: ராஜமவுலியின் நன்றி | மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! |

நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர், ஹிந்தியில் தடக் என்ற படத்தில் அறிமுகமாகிறார். இப்படம் ஜூலை 20-ம் தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில், அவர் தனது அம்மா ஸ்ரீதேவியைப்போன்று இந்திய அளவில் ஒரு நடிகையாக வர வேண்டும் என்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதாக செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில், ஜான்வி கபூர் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், நான் நடிப்பு விசயத்தில் அம்மாவை பின்பற்றவில்லை. அவர் நடித்த காலகட்டம் வேறு. என்னைப் பொறுத்தவரை எந்த மொழி ரசிகர்கள் என்னை முழுமையாக ஏற்றுக்கொள்கிறார்களோ அந்த மொழியில் அதிகப்படியாக கவனம் செலுத்த விரும்புகிறேன்.
ஸ்ரீதேவியைப் போன்று ஆக வேண்டும் என்று எனக்கு யாரும் அழுத்தம் கொடுக்கவில்லை. என் வழியில் செல்லவே எனக்கு சுதந்திரம் கொடுத்திருக்கிறார்கள் என்று கூறியுள்ளார் ஜான்வி கபூர்.