24 ஆண்டுகளுக்கு பிறகு டிஜிட்டலீில் ரீ ரீலீஸாகும் மோகன்லாலின் ராவண பிரபு | காமெடி நடிகர் கிங்காங் மகளின் திருமணம் நடைபெற்றது! | தனியார் பேருந்துகள் ஓடாத கேரளா வெளிநாடு போல இருக்கிறது : 2018 இயக்குனர் சர்ச்சை கருத்து | 7 வருடங்களாக புறக்கணிக்கப்பட்ட பட வாய்ப்பு : விஷ்ணு விஷால் ஓபன் டாக் | மீண்டும் அல்லு அர்ஜுன் உடன் இணையும் ராஷ்மிகா | டான் 3ம் பாகத்தில் இணைந்த கிர்த்தி சனோன்! | தெலுங்கு நடிகருடன் இணையும் பி.எஸ்.மித்ரன்! | பிரபாஸ் படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடும் தமன்னா! | அக்., 31ல் ஒரே பாகமாக வெளியாகும் ‛பாகுபலி : தி எபிக்' | 'கைதி 2'க்கு முன்பாக உருவாகும் 'மார்ஷல்' |
கடும் எதிர்ப்புக்கு இடையில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் பத்மாவத். இந்தப்படத்தில் தீபிகா படுகோனே சித்தூர் ராணி பத்மாவதி கேரக்டரில் நடித்திருந்தார். அப்போது அவர் அணிந்து நடித்த நகைகள், உடைகள் வடநாட்டு மக்களை பெரிதும் கவர்ந்தது.
குறிப்பாக ராஜஸ்தான் பெண்கள் அதனை பெரிதும் விரும்பினார்கள். படப்பிடிப்பில் தீபிகா படுகோனே 35 கிலோ எடை வரையிலான நகை, புடவைகள் அணிந்து நடித்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது வடநாட்டு நகை கடைகளில் பத்மாவதி கலெக்ஷன் என்ற தனி பிரிவை தொடங்கியிருக்கிறார்கள். தீபிகா படுகோனே நடித்த காட்சிகளை புகைப்படங்களாக வைத்து அதில் அவர் அணிந்திருந்த நகைகளை அருகில் காட்சிப்படுத்தி விற்பனை செய்கிறார்கள்.
அதுமட்டுமில்லாமல் பேன்சி நகை கடைகள், கவரிங் நகை கடைகளிலும் பத்மாவதி நகைகள் விற்கப்படுகிறது. மக்களின் ஆர்வத்தை கண்டு நகை வியாபாரிகளும் பத்மாவதி நகை தயாரிப்பில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
"படத்தின் வசூலை விட பத்மாவதி நகை வியாபாரம் அதிக அளவில் நடக்கும்" என்று வடநாட்டு நகை வியாபாரிகள் தெரிவிக்கிறார்கள். பத்மாவதியின் நகைகளுக்கு தென்னிந்தியாவில் வரவேற்பில்லை என்பது குறிப்பிடத்தக்கது.