'ராயன்' படத்திற்கு முன்பு 'குபேரா' டீசர்' | கோடை விடுமுறை வெளியீடுகள் ஆரம்பம் : மே 3ல் 5 படங்கள் ரிலீஸ் | ஸ்ருதிஹாசனின் இரண்டாவது காதல் பிரிவு? - காரணம் என்ன? | மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் |
சமூக வலைத்தளங்களில் இந்தியாவில் பேஸ்புக், டுவிட்டர் பயன்படுத்துபவர்கள்தான் அதிகம். சினிமா பிரபலங்களில் பலரும் டுவிட்டர் வலைதளத்தைத்தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள். எந்த பிரபலத்திற்கு எவ்வளவு பாலோயர்கள் இருக்கிறார்கள் என்பது அவர்களுக்கான இமேஜ் ஆகவும் பார்க்கப்படுகிறது.
இந்தியாவிலேயே டுவிட்டரில் அதிக பாலோயர்களைக் கொண்டு முதலிடத்தில் நடிகர் அமிதாப்பச்சன் இருந்தார். 32 மில்லியன் அதாவது, 3 கோடியே 20 லட்சம் பாலோயர்களை வைத்துள்ளார். ஆனால், டுவிட்டர் தளம், தன் பாலோயர்கள் எண்ணிக்கையை குறைத்துவிட்டதாக அமிதாப்பச்சன் தெரிவித்துள்ளார்.
“டுவிட்டர், என்னுடைய பாலோயர்களை குறைத்துவிட்டீர்கள் ?. ஹாஹா..அது ஜோக் தான். உன்னை விட்டு விலக வேண்டிய நேரம் வந்துவிட்டது. பயணத்திற்கு நன்றி. கடலில் பல மீன்கள் உள்ளன. இன்னும் நிறைய அற்புதங்கள் உள்ளன,” என அவர் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
அமிதாப்பச்சனை விட தற்போது ஷாரூக்கான் 33 மில்லியன், அதாவது 3 கோடியே 30 லட்சம் பாலோயர்களைப் பெற்று டுவிட்டரில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். இதனாலேயே அமிதாப் டுவிட்டரை விட்டு விலக இருப்பதாக கூறப்படுகிறது.
சமூக வலைத்தளங்களில் அமிதாப்பச்சன் எழுதுவதைப் உலகம் முழுவதும் பல ரசிகர்கள் ஆவலுடன் படித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.