ரீ-ரிலீஸில் சாதனை படைத்த 'கில்லி' | 'ராயன்' படத்திற்கு முன்பு 'குபேரா' டீசர்' | கோடை விடுமுறை வெளியீடுகள் ஆரம்பம் : மே 3ல் 5 படங்கள் ரிலீஸ் | ஸ்ருதிஹாசனின் இரண்டாவது காதல் பிரிவு? - காரணம் என்ன? | மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் |
ஹிந்தி நடிகர் ஷாரூக்கானின் மகள் சுகானா கான். 17 வயதாகும் அவர் லண்டனில் படித்து வருகிறார். ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி சினிமாவில் நடிக்க தயாராகிக் கொண்டிருப்பதாக செய்திகள் வெளியான நேரத்தில், சுகானா கானும் சினிமாவில் அறிமுகமாக இருப்பதாக பாலிவுட்டில் செய்திகள் வெளியாகி வந்தன.
அதையடுத்து, என் மகள் தற்போது படித்துக் கொண்டிருக்கிறார். அவர் சினிமாவில் நடிப்பது பற்றி இதுவரை எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை என்று சொல்லி அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ஷாரூக்கான். அந்த சமயத்தில் சுகானா கானின் போட்டோக்கள் இணையதளங்களில் வைலாக பரவியது. இப்போது மறுபடியும் சுகானா கான் நீச்சல் குளத்தில் நீராடுவது போன்ற ஒரு புகைப்படம் கடந்த சில தினங்களாகவே இணையதளங்களில் வைரலாகிக்கொண்டிருக்கிறது.