மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
சுல்தான் படத்தை தொடர்ந்து மீண்டும் அலி அபாஸ் ஜாபர் இயக்கத்தில், "டைகர் ஜிந்தா ஹே" படத்தில் நடித்து வருகிறார் சல்மான் கான். இது "ஏக்தா டைகர்" படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகி வருகிறது. கத்ரீனா கைப் ஹீரோயினாக நடிக்கிறார். இது ஒரு பக்கா ஆக்ஷ்ன் படம்.
டைகர் ஜிந்தா ஹே படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இவர்கள் மீண்டும் இணைந்து ஒரு படம் பண்ண இருப்பதாகவும், படத்திற்கு "கான்" என்று பெயர் வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இப்படத்தை சல்மானின் உறவினரான அதுல் அக்னிகோத்ரி தயாரிக்க இருப்பதாகவும் 2019-ல் இந்தப்படத்தின் ஷூட்டிங் ஆரம்பமாகும் என தெரிகிறது.