மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
மாதவன்-விஜயசேதுபதி நடிப்பில் வெளியான படம் விக்ரம் வேதா. இந்த படத்தை புஷ்கர் காயத்ரி இயக்கியிருந்தனர். மாதவன் போலீசாகவும், விஜயசேதுபதி ரவுடியாகவும் நடித்த இந்த படம் வெற்றி பெற்றது. இந்த படத்தில் விஜயசேதுபதியின் நடிப்பைப் பார்த்துதான் அவருக்கு, சிரஞ்சீவி நடிக்கும் சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
மேலும், இந்த விக்ரம் வேதா படம் தெலுங்கு மற்றும் இந்தியில் ரீமேக் ஆகிறது. இப்படத்தின் இந்தி ரீமேக் உரிமையை பிரபல பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் பெற்றுள்ளார். இந்த படத்தை தயாரித்து ஒரு வேடத்தில் நடிக்கிறாராம் ஷாரூக்கான். ஆனால் அவர் விக்ரம் வேடத்தில் நடிக்கிறாரா? இல்லை வேதா வேடத்தில் நடிக்கிறாரா? என்பது இன்னும் முடிவாகவில்லையாம்.