பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு | தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு | ஒரு அப்டேட் கூட வரவில்லை, வருத்தத்தில் அஜித் ரசிகர்கள் | இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் |
ஹேட் ஸ்டோரி 3 படத்தில் நடிகை டெய்சி ஷா தாராளமான கவர்ச்சி காட்டி நடித்திருந்தார். பல நெருக்கமான காட்சிகளிலும் நடித்திருந்தார். கவர்ச்சி நடிகை அளவிற்கு அவர் நடித்திருந்தது பற்றி பாலிவுட்டில் பரவலாக பேசப்பட்டது.
இந்நிலையில் சமீபத்தில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டு பேசிய டெய்சி, இனி தான் கவர்ச்சி வேடங்களில் நடிக்க போவதில்லை என கூறினார். பேட்டியில் அவர் கூறுகையில், ஹேட் ஸ்டோரி 3 படத்தில் நான் மிகவும் தாராளமாக கவர்ச்சி காட்டி நடித்திருந்தேன். என்னால் மிக எளிமையான பெண் போன்ற தோற்றம் கொண்ட வேடங்களில் மட்டுமே நடிக்க முடியும் என மக்கள் கருகிறார்கள்.
அந்த இமேஜை உடைக்க வேண்டும் என நினைத்தேன். அதனால் தான் ஹேட் ஸ்டோரி 3 படத்தில் கவர்ச்சி வேடத்தில் நடித்தேன். இனி அதே போன்ற வேடங்களில் ஒரு போதும் நடிக்க வேண்டாம் என முடிவு செய்துள்ளேன் என்றார்.