மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
அஜய் தேவ்கன் நடிக்கும் ரெய்டு படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 20 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன் கூறப்பட்டது. ஆனால் தற்போது திட்டமிட்ட தேதிக்கு முன்னதாகவே படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனராம்.
அஜய் தேவ்கன், இலியானா டிக்ரூஸ் நடிக்கும் இப்படம் அடுத்த ஆண்டு மார்ச் 16 ம் தேதியன்று ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக படக்குழுவினர் தற்போது அறிவித்தனர். இப்படத்தை ராஜ்குமார் குப்தா இயக்குகிறார். பூஷன் குமார், குமார் பதக், அபிஷேக் பதக் ஆகியோர் தயாரிக்கின்றனர். இப்படத்தில் அஜய் தேவ்கன் வருமான வரித்துறை அதிகாரி வேடத்தில் நடிக்கிறார். பல உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டது தான் ரெய்டு படத்தின் கதையாம்.