மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
உலக புகழ்பெற்ற பேட்மிண்டன் வீராங்கணை சாய்னா நெய்வாலின் வாழ்க்கை வரலாறு சாய்னா என்ற பெயரில் ஹிந்தியில் தயாராகிறது. அமோல் குப்தா இயக்குகிறார். இதில் சாய்னாவாக நடிக்கிறார் பிரபல ஹிந்தி நடிகை ஸ்ரத்தா கபூர்.
படத்தில் சாய்னாவாக நடிப்பதற்கு ஏற்ற வகையில் அவரின் அன்றாட நடவடிக்கைகளை அறிந்து கொள்ளவும், அவரது மேனரிசத்தை புரிந்து கொள்ளவும் ஐதராபத் சென்றிருக்கிறார் ஸ்ரத்தா. இதற்காக அவர் சாய்னா வீட்டிலேயே சில நாட்கள் தங்குகிறார். அதோடு சாய்னாவின் விளையாட்டு ஸ்டைலையும் பேட்மிண்டன் பயிற்சியும் பெற்று வருகிறார். சாய்னாவும் அவரது பயிற்சியாளர் கோபிசந்தும் இணைந்து ஸ்ரத்தா கபூருக்கு பேட்மிண்டன் பயிற்சி அளித்து வருகிறார்கள். படப்பிடிப்புகள் விரைவில் தொடங்க இருக்கிறது.