மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்கோத்ரா, இப்போது ஜென்டில்மேன், ஐயாரி உள்ளிட்ட சில படங்களில நடித்துள்ளார். இதில், ஜென்டில்மேன் படம் வருகிற ஆகஸ்ட் 25-ம் தேதி ரிலீஸாக உள்ளது. மற்றொரு படமான ஐயாரி 2018-ம் ஆண்டு, குடியரசு தினத்தில் வெளியாக உள்ளது. அன்றைய தினம் ரஜினி, அக்ஷ்ய் குமார் நடிப்பில் உருவாகியுள்ள 2.O படமும் ரிலீஸாகிறது.
ரஜினி படத்துடன் மோதுவது குறித்து சித்தார்த் மல்கோத்ரா கூறியதாவது... "இது தற்செயலாக நடந்த ஒரு விஷயம். ஆனால் இது சரியாக வருமா என்று தெரியவில்லை. தற்போது தான் ஐயாரி படத்தின் ஷூட்டிங் முடிந்துள்ளது. இன்னும் நாள் இருக்கிறது, அதுவரை பொறுத்திருங்கள். என்னுடைய கவலை எல்லாம் அந்தப்படத்திற்கு முன்பாக எனது மற்ற இரண்டு படங்கள் வெளியாக உள்ளது, ஆகையால் இப்போதைக்கு அதை பற்றி தான் யோசித்து கொண்டிருக்கிறேன்" என்று கூறியுள்ளார்.