மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
நடிகை ஸ்ரீதேவியை தொடர்ந்து தற்போது, நடிகை அம்ரிதா சிங்கும் தனது மகள் சாரா அலி கானை பற்றி கிசுகிசுக்கள் வந்து விடக் கூடாது என்பதில் மிகுந்த கவனமாக இருந்து வருகிறார். தனது மகள் சாராவை புகழ்பெற செய்யும் விதத்திலான செய்திகளும், படங்கள் பற்றி விளம்பரங்களும் மட்டுமே வர வேண்டும் என அம்ரிதா விரும்புகிறாராம்.
அதனால் ஆண் நண்பர்களுடன் வெளியே செல்ல கூடாது என தனது மகள் சாரா அலி கானிடம் கண்டிப்புடன் கூறி உள்ளாராம் அம்ரிதா சிங். சாரா பற்றி கிசுகிசுக்கள், வதந்திகள் வராமல் இருப்பதற்காகவே இப்படி கண்டிஷன் போட்டுள்ளாராம் அம்ரிதா சிங்.
நடிகை சாரா அலி கான், கேதார்நாத் என்ற படத்தின் மூலம் பாலிவுட்டிற்கு அறிமுகமாகி உள்ளார். இப்படத்தில் சூஷந்த் சிங் ராஜ்புட்டிற்கு ஜோடியாக நடித்து வருகிறார் சாரா. அபிஷேக் கபூர் இயக்கத்தில், ஏக்தா கபூர் தயாராகி வரும் இப்படம் 2018 ம் ஆண்டு ஜூன் மாதம் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.