மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
ஜூட்வா 2 படத்தில் நடித்து வரும் நடிகர் வருண் தவான், அடுத்தப்படியாக சுஜித் சர்கார் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் கதையை ஜூகி சதுர்வேதி எழுத, சுஜித் இயக்குகிறார். அக்டோபர் மாதம் முதல் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.
இப்படம் பற்றி வருண் தவான் கூறியதாவது... "இயக்குநர் சுஜித்தின் மிகப்பெரிய ரசிகன் நான், அவருடைய படத்தில் நடிக்க வேண்டும் என்பது என் ஆசை. அக்டோபர் முதல் படப்பிடிப்பு ஆரம்பிக்கிறது. ஒரு வித்தியாசமான காதல் கதையுடைய படமாக இப்படம் இருக்கும். கொஞ்சம் வித்தியாசமான படம் தான், இப்படியொரு கேரக்டரில் நடிப்பது சற்று சவாலானது. இப்படத்தின் மூலம் ஒரு வித்தியாசமான வருணை ரசிகர்கள் பார்ப்பார்கள்" என்றார்.