'ராயன்' படத்திற்கு முன்பு 'குபேரா' டீசர்' | கோடை விடுமுறை வெளியீடுகள் ஆரம்பம் : மே 3ல் 5 படங்கள் ரிலீஸ் | ஸ்ருதிஹாசனின் இரண்டாவது காதல் பிரிவு? - காரணம் என்ன? | மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் |
பிரபல நிழல்உலக தாதா தாவுத் இப்ராஹிமின் சகோதரி ஹசீனா பார்கர். இவர் வாழ்க்கை சினிமாவாக உருவாகி வருகிறது. ஹசீனா ரோலில் ஸ்ரத்தா கபூர் நடிக்கிறார். அபூர்வா லக்கியா இயக்க, சுவிஸ் என்டர்டெயின்ட்மென்ட் சார்பில் நாகித் கான் தயாரிக்கிறார். ஸ்ரத்தாவுடன் சித்தாந்த் கபூரும் முக்கியமான ரோலில் நடிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறது. முன்னதாக ஹசீனா படம் ஜூலை 14-ம் தேதி ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது ஆகஸ்ட் மாதத்திற்கு படம் தள்ளிபோய் உள்ளது. படப்பிடிப்புகள் குறிப்பிட்ட நாளுக்குள் முடியாத காரணத்தினால் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்திருக்கிறார்கள். அதன்படி ஹசீனா படம் வருகிற ஆகஸ்ட் 18-ம் தேதி ரிலீஸாக உள்ளது. புதிய ரிலீஸ் குறித்த போஸ்டரும் வெளியாகியுள்ளது.