மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
சல்மான் நடிப்பில் வெளியாகி வெற்றிப்பெற்ற படம் தபாங் மற்றும் தபாங்-2. தபாங் முதல்பாகத்தை அபினவ் காஸ்யாப் இயக்கினார், இரண்டாம் பாகத்தை சல்மானின் தம்பி அர்பாஸ் கான் இயக்கினார். விரைவில் தபாங்-3 உருவாக உள்ளது. தபாங்-3யையும் அர்பாஸ் கான் தான் இயக்குவதாக இருந்தது. தபாங்-3, சல்மான் ஆரம்பிக்காமல் தள்ளிப்போட்டு கொண்டே போவதால் அவர் மீது அர்பாஸ் அதிருப்தியில் இருப்பதாக கூட செய்தி வந்தது.
இந்நிலையில், இப்போது அர்பாஸ்க்கு இன்னொரு ஷாக்காக, தபாங்-3 படத்தை பிரபுதேவா இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. ஏற்கனவே பிரபுதேவா, சல்மானை வைத்து வான்ட்டட் என்ற படத்தை இயக்கியிருந்தார். அடுத்தப்படியாக வான்ட்டட் இரண்டாம் பாகத்தை இயக்க உள்ளார். இந்தச்சூழலில் தபாங் அளவுக்கு தபாங்-2 வெற்றி பெறாததால் அர்பாஸ்க்கு பதிலாக பிரபுதேவாவை கொண்டே தபாங்-3யை இயக்க சல்மான் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.