மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
நடிகர் சல்மான் - இயக்குநர் கபீர் கூட்டணியில் உருவாகியுள்ள மற்றுமொரு படம் தான் டியூப்லைட். சல்மான் உடன் சல்மானின் சகோதரர் சோகைல் கான், ஓம் புரி ஆகியோரும் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். சீன நடிகை ஜூகுவும் நடித்திருக்கிறார். இப்படம் வருகிற ஜூன் மாதம் 23-ம் தேதி ரிலீஸாக உள்ள நிலையில், படத்தின் டிரைலர் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. டிரைலருக்கு ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. ஆனால் சல்மான் கான் இந்த டிரைலரை பார்க்க விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து சல்மான் கூறியிருப்பதாவது... "டியூப்லைட் டிரைலரை பார்த்தபோது அதில் ஓம் புரி இருந்தார். அந்தநொடி என்னை கொன்றது. டியூப்லைட் ஷூட்டிங் நடந்த சமயத்தில் அவரும் எங்களுடன் நடித்து வந்தார். திடீரென அவர் மறைந்துவிட்டார், அந்த சோகம் தீரவில்லை. அதனால் தான் டியூப்லைட் டிரைலரை எனக்கு பார்க்க பிடிக்கவில்லை" என்று கூறியுள்ளார்.