மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தின் சூப்பர் ஹிட் வெற்றிக்கு பிறகு பாலிவுட்டில் ஸ்ரீதேவி நடிக்கும் படம் மாம். ரவி உதய்வர் இயக்கும் இப்படத்தில் ஸ்ரீதேவி தான் முதன்மை ரோலில் நடிக்கிறார். இன்னொரு முக்கியமான ரோலில் அக்ஷ்ய் கண்ணா நடிக்கிறார். ரவி உதய்வர் இயக்குகிறார். ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். ஏற்கனவே மாம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில் தற்போது, இந்தப்படத்தில் அக்ஷ்ய் கண்ணாவின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளனர். படத்தில் அக்ஷ்ய் கண்ணா, நெகட்டீவ் ரோலில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. மாம் படத்தில் ஸ்ரீதேவி, அக்ஷ்ய் கண்ணா தவிர்த்து நவாசுதீன் சித்திக்கும் முக்கியமான ரோலில் நடிக்கிறார். மாம் படம் ஹிந்தி மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட இருக்கிறது.