ஸ்ருதிஹாசனின் இரண்டாவது காதல் பிரிவு? - காரணம் என்ன? | மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி |
தமிழ் உட்பட தென்னிந்திய சினிமாவையும் தாண்டி பாலிவுட்டில் வெற்றி நாயகியாக கொடிகட்டி பறந்தவர் நடிகை ஸ்ரீதேவி. திருமணம், குழந்தை என சிலகாலம் சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்தவர், இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தின் மூலம் ரீ-என்ட்ரியானார். 2012-ம் ஆண்டு வெளிவந்த இப்படம் சூப்பர் ஹிட்டானது. அதன்பிறகு தமிழில் புலி படத்தில் ஒரு முக்கியமான ரோலில் நடித்தவர் இப்போது மாம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
ஸ்ரீதேவி உடன் நவாசுதீன் சித்திக், அக்ஷ்ய் கண்ணா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். அம்மா-மகள் பாசத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. மாம் படம் வருகிற ஜூலை 14-ம் தேதி ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்போது அதில் ஒரு மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. ஏற்கனவே சொன்ன ரிலீஸ் தேதியை விட ஒருவாரம் முன்னதாகவே அதாவது ஜூலை 7-ம் தேதி ரிலீஸாக இருக்கிறது.
மாம் படத்தை ரவி உதய்வர் இயக்க, ஜீ ஸ்டுடியோஸ், சுனில் மன்சந்தா, நரேஷ் அகர்வால், கவுதம் ஜெயின், போனி கபூர் உள்ளிட்டோர் தயாரிக்கின்றனர்.