மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
அமீர்கான் நடிப்பில் கடந்தாண்டு இறுதியில் வெளியாகி வெற்றிப்பெற்ற பிளாக்பஸ்டர் சூப்பர் ஹிட் திரைப்படம் ‛தங்கல்'. மல்யுத்த வீரர் போகத்தின் வாழ்க்கை சம்பவத்தை அடிப்படையாக வைத்து வெளிவந்த இப்படம் திரையிடப்பட்ட அனைத்து மொழிகளிலும் வெற்றி பெற்றது. மேலும் இப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த சைரா வாசிமிற்கு சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதும் கிடைத்தது.
பிலிம்பேர் உள்ளிட்ட பல விருதுகளும் இப்படத்திற்கு கிடைத்துள்ளது. இந்நிலையில் 18-வது ஐப்பா விருதுகள் ஜூலை மாதம் நியூயார்க்கில் நடக்கிறது. இந்த விருதுக்கு அமீர்கானின் தங்கல் படம் தேர்வாகவில்லை. காரணம் விருதுக்கு படத்தை அனுப்பவேயில்லை தங்கல் படத்தின் தயாரிப்பாளரான அமீர்கான்.
இதுகுறித்து விருது குழுவில் உள்ள அண்ட்ரி டிமின்ஸ் கூறுகையில், ‛‛பல்வேறு தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஐப்பா விருதுக்கான விண்ணப்பத்தை அனுப்பியிருக்கிறோம். ஏகப்பட்ட படங்கள் விருது குழுவுக்கு வந்துள்ளது. ஆனால் தங்கல் படக்குழுவினர் விண்ணப்பிக்கவே இல்லை. பல சாதனைகளை படைத்தது தங்கல் படம். அமீர்கான், அந்தப்படத்தில் நடித்த குழந்தைகள் நட்சத்திரங்கள் அனைவரும் அவ்வளவு அருமையாக நடித்திருந்தனர். இருந்தாலும் விருதுக்கு தங்கல் படத்தை அனுப்பாதது எங்களுக்கு வருத்தத்தை தருகிறது'' என்று கூறியுள்ளார்.