ஒரு அப்டேட் கூட வரவில்லை, வருத்தத்தில் அஜித் ரசிகர்கள் | இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? |
சமீபத்தில் வெளியான ‛பில்வுரி' படத்தில் பஞ்சாப்பை சேர்ந்த நடிகர் தில்ஜித் அசத்தியிருந்தார். பில்வுரி கொடுத்த வெற்றி, தில்ஜித்திற்கு அடுத்தடுத்து பாலிவுட்டில் பட வாய்ப்பை பெற்று தந்துள்ளது. தில்ஜித்தை போன்றே பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த மற்றுமொரு நடிகர் ஜிப்பி கிரேவல் என்பவர், பாலிவுட்டில் களமிறங்கியுள்ளார்.
இயக்குநர் ரஞ்சித் திவாரி இயக்கி வரும் படம் ‛லக்னோ சென்ட்ரல். இப்படத்தில் பரான் அக்தர், தியான பென்ட்டி, ரோனித் ராய் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்கள். இவர்களுடன் ஜிப்பியும் முக்கியமான ரோலில் நடிக்கிறார். பாலிவுட்டில் நடிப்பதை ஜிப்பியே உறுதிப்படுத்தியிருக்கிறார்.
இதைப்பற்றி ஜிப்பி கூறியதாவது.... "‛லக்னோ சென்ட்ரல் படத்தில் நான் நடித்துள்ளேன். படத்தில் நான் நடிக்கும் காட்சிகள் அனைத்தையும் நடித்து முடித்துவிட்டேன். இது ஒருமிகப்பெரிய படம்" என்று கூறியுள்ளார். ‛லக்னோ சென்ட்ரல் படம் வருகிற செப்டம்பர் மாதம் 15-ஆம் தேதி வெளியாக இருக்கிறது.