'ராயன்' படத்திற்கு முன்பு 'குபேரா' டீசர்' | கோடை விடுமுறை வெளியீடுகள் ஆரம்பம் : மே 3ல் 5 படங்கள் ரிலீஸ் | ஸ்ருதிஹாசனின் இரண்டாவது காதல் பிரிவு? - காரணம் என்ன? | மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் |
நடிகை பிரியங்கா சோப்ராவின் சகோதரி பரிணிதி சோப்ரா. இவரும் பாலிவுட்டில் நடிகையாக உள்ளார். இவர் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் ‛மேரி பியாரி பிந்து'. பரிணிதியுடன் ஆயுஸ்மான் குரான் நடிக்க, அக்ஷ்ய் ராய் இயக்கியுள்ளார். இப்படத்தில் பரிணிதி ஒரு பாட்டும் பாடியுள்ளார். நேற்று இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா மும்பையில் நடந்தது. இதில் பங்கேற்ற பரிணிதியிடம் சமீபகாலமாக நடிகர்கள் பாடுகின்றனர், பாடகர்களுக்கான மாற்றா நடிகர்கள் என்று கேட்டபோது, அதற்கு பதிலளித்த பரிணிதி...
‛‛பாடகர்களுக்கு நிச்சயம் மாற்று யாரும் கிடையாது, அவர்கள் எல்லோரும் முறையான பயிற்சி பெற்று அற்புதமாக பாடுபவர்கள். ஆனால் நடிகர்கள் அப்படியல்ல, ஆசைக்காக பாடுகின்றனர். நிச்சயம் நடிகர்கள், பாடகர்களுக்கு மாற்றாக இருக்க முடியாது. சினிமாவில் நடிகர்கள் ஆடுகிறார்கள், அதற்காக ஏன் நடிகர்கள் ஆடுகிறீர்கள் என்று கேட்க முடியுமா.?, பிறகு ஏன் பாடுவதை மட்டும் கேட்கிறீர்கள், நடிகர்கள் பாடக்கூடாதா என்ன.? என்று எதிர்கேள்வி கேட்கிறார் பரிணிதி.