முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்குகிறார் ராகவா லாரன்ஸ் | அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி |
பாலிவுட்டில் தொடர்ந்து நம்பர் 1 ஹீரோவாக இருப்பவர் சல்மான்கான். சுல்தான் படத்திற்கு பிறகு டியூப்லைட் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்ஷ்ன்ஸ் பணிகள் மும்முரமாய் நடந்து வருகிறது. இதையடுத்து, அலி அப்பாஸ் இயக்கும் ‛டைகர் ஜிந்தா ஹே' படத்தில் நடித்து வருகிறார் சல்மான். சமீபத்தில் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைபெற்றுள்ளது, அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ஓரிரு நாளில் ஆரம்பமாக உள்ளது.
இந்நிலையில் டைகர் ஜிந்தா ஹே படத்தையடுத்து தனது உறவினரான அதுல் அக்னிஹோத்ரி இயக்கும் படத்தில் நடிக்கிறார் சல்மான். இந்தப்படத்திலும் சல்மான் ஜோடியாக கத்ரீனாவை நடிக்க கேட்டுள்ளனர், அவரும் சம்மதம் சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. படத்திற்கு இன்னும் தலைப்பு முடிவாகவில்லை, ஜூன் மாதத்தில் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என தெரிகிறது.