விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
கோல்மால் படங்களின் வரிசையில் நான்காம் பாகமாக தற்போது ‛கோல்மால் அகைன்' உருவாகிறது. இதில் அஜய் தேவ்கன், துஸ்ஸார் கபூர், ஸ்ரேயாஸ், குணால் கேமு, தபு, பரிணீத சோப்ரா, நீல் நிதின் முகேஷ், பிரகாஷ் ராஜ்... என ஏகப்பட்ட திரைநட்சத்திரங்கள் நடிக்கின்றனர். ரோகித் ஷெட்டி இயக்குகிறார். காமெடி கலாட்டாக்களுடன் உருவாக இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று முதல் ஆரம்பமானது. முதற்கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடக்கிறது. இதுதவிர ஐதராபாத், ஊட்டி, கோவா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடக்கிறது. அஜய் தேவ்கன் தவிர்த்து மற்றவர்களின் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. தற்போது அஜய், தனது பாத்சாகோ படத்தில் பிஸியாக இருப்பதால் ஒருவாரம் கழித்து கோல்மால் அகைன் படப்பிடிப்பில் பங்கேற்க உள்ளார். இந்தாண்டு இறுதியில் படத்தை ரிலீஸ் செய்ய உள்ளனர். தேதி இன்னும் முடிவாகவில்லை.