மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
ஆன்கின் படத்தின் அடுத்த பாகத்திலும் நடிகர் அர்ஜூன் ராம்பால் நடிக்கிறாராம். ஆன்கின் 2 என பெயரிடப்பட்டுள்ள இப்படத்திலும் பார்வையற்றவர் கேரக்டரில் நடிக்கிறார் அர்ஜூன். ஆன்கின் 2 படத்தில் அமிதாப் பச்சன், அனில் கபூர், அர்ஷத் வர்ஷி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளனர். இப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீசாக உள்ளது. சமீபத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் ஆன்கின் 2 படம் பற்றி அர்ஜூன் பேசி உள்ளார். பேட்டியில் அவர் கூறுகையில், ஆன்கின் என் வாழ்க்கையில் தனிச்சிறப்பான படம். இப்படம் பற்றி மக்கள் இன்றும் கூட பேசுகிறார்கள். இது, இதை போன்று இன்னும் நிறைய படங்கள் பண்ண வேண்டும் என்ற உத்வேகத்தை எங்களுக்கு கொடுக்கிறது. தற்போது ஆன்கின் 2 பாகத்தில் நடிக்க உள்ளது மிக சந்தோஷமாக உள்ளது. இப்படத்தை பிரம்மாண்ட படமாக்க திட்டமிட்டுள்ளோம். சமீபத்தில் ரிலீசான காபில் படம் போல். அப்படம் மக்கள் விரும்பும்படியாக இருந்தது. இந்த சவால் யாருடனும் போட்டி போடுவதற்காக அல்ல. படத்தின் தரத்தை உயர்த்துவதற்காக தான் என்றார்.