‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
நடிகை தமன்னா இந்தியில் நடித்த படங்கள் எதுவும் அவருக்கு எதிர்பார்த்த அளவிற்கு பெயர் வாங்கித் தரவில்லை. இந்நிலையில், புதிய நம்பிக்கையுடன் மீண்டும் பாலிவுட்டிற்கு திரும்ப தமன்னா விரும்புகிறாராம். சமீபத்தில் இது குறித்து அவர் அளித்த பேட்டி ஒன்றில், சில படங்களுக்கு கதை கேட்டு வருகிறேன். விரைவில் முடிவு செய்து, எனது அடுத்த படம் குறித்த முடிவை அறிவிப்பேன். இப்போது வரை நான் இந்தியில் நடித்த பல படங்களில், எனது நடிப்பு பெரிய அளவில் பேசப்படவில்லை. இனி நான் நடிக்கும் படம் எதுவாக இருந்தாலும் அது நடிப்புக்கு முக்கியத்துவம் தரும் விதத்திலேயே இருக்கும் என கூறினார்.