மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
பாலிவுட்டில் இருந்து ஹாலிவுட் சென்ற நடிகைகளில் பிரியங்கா சோப்ராவும் ஒருவர். தற்போது இவர் குவாண்டிகோ என்ற ஹாலிவுட் தொடரிலும், ‛பேவாட்ச்' என்ற ஹாலிவுட் படத்திலும் நடித்து வருகிறார். சமீபத்தில் பிரியங்கா ‛காபி வித் கரண்' நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவரிடத்தில் பேவாட்ச் படத்தில் ஹீரோ டுவைன் ஜான்சன் உடன் நடித்த அனுபவம் மற்றும் அவரைப்பற்றி கேட்டபோது, அவர் பதிலரித்தாவது...
" ராக் என்ற டுவைன் ஜான்சன் மிகவும் நல்ல மனிதர். என் அம்மா படப்பிடிப்பிற்கு வந்த போது அவருடன் அன்பாக பேசி, அமரவைத்து நன்கு கவனித்து கொண்டார். அவரின் நடவடிக்கைகளை எல்லாம் பார்த்தால் நடிகர் சல்மான் போல் தான் இருந்தது. அவரை சுற்றி நிறைய நல்ல மனிதர்கள் எப்போதும் இருப்பார்கள். ராக்குடன் பேசும் போது நம் குடும்பத்தில் உள்ள ஒருவரிடம் பேசுவது போன்ற உணர்வை தரும். அவர் பேசுவதும் சல்மான்கான் போல் தான் இருக்கும்" என்று கூறினார்.
‛பேவாட்ச் ' படம் இந்த ஆண்டு மே மாதம் 26ஆம் தேதி வெளியாக இருக்கிறது.