பிறந்தநாளில் ரசிகர்கள் ஆசையை நிறைவேற்றிய தனுஷ் | பிளாஷ்பேக்: டைட்டிலில் பெயர் போட்டுக்கொள்ளாத தயாரிப்பாளர் | எம்ஜிஆர் - கருணாநிதி, நட்பு, மோதல் தழுவலில் 'காந்தா'? | கோவாவில் கூடிய 90 ஸ்டார்ஸ் : ஆட்டம், பாட்டம்,பார்ட்டி என கொண்டாட்டம் | 25 நாட்களைக் கடந்த '3 பிஹெச்கே, பறந்து போ' | 100 கோடி வசூலைக் கடந்த 'ஹரிஹர வீரமல்லு' | 'சாயரா' இந்தியாவில் நிகர வசூல் 250 கோடி | 'அவதார் - பயர் அண்ட் ஆஷ்' டிரைலர் ரிலீஸ் | ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் |
பாலிவுட்டில் வளர்ந்து வரும் இளம் ஹீரோக்களில் ரன்பீர்கபூரும் ஒருவர். இவர் நடிப்பில் சமீபத்தில் நடித்து வெற்றியடைந்த படம் ‛ஏ தில் ஹே முஷ்கில்'.பாலிவுட்டில் இருக்கும் பிரபல இயக்குநர்களில் சஞ்சய் குப்தாவும் ஒருவர். தற்போது நடிகர் ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் வெளிவர இருக்கும் படம் ‛காபில்'. சஞ்சய் குப்தா இப்படத்தின் புரொமோஷனில் பிஸியாக இருக்கிறார். நிகழ்ச்சியில் பங்கேற்ற சஞ்சய் தனது அடுத்த படமான ‛பிகாடே நவாப்' படத்தில் ரன்பீர் கபூரை நடிக்க வைக்க துடிப்பதாக கூறினார்.
இதைப்பற்றி சஞ்சய் குப்தா கூறியதாவது...." நான் ரொம்ப விரும்பும் ஒரு நடிகர் அது தான் ரன்பீர் கபூர். இவருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது எனது கனவு. ரன்பீர் என்று மட்டுமே ஒரு கதையை நான் வைத்து இருக்கிறேன், அந்த கதையை இதுவரை நான் யாரிடமும் கூறியது இல்லை. இந்த படத்தை நான் இயக்குவேன் என்றால் படத்தின் ஹீரோ ரன்பீர் தான். படத்தின் கதையை நான் அவரை எண்ணியே எழுதினேன். அவரை தவிர யாரையும் அந்த படத்தில் என்னால் நடிக்க வைக்க முடியாது" என்று கூறினார்.