மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
நடிகர் விவேக் ஓபராய் விரைவில் மராத்தி மொழி படத்தில் நடிக்க உள்ளாராம். இந்த மராத்தி படத்திற்கான கதையை நடிகர் ரிதிஷ் தேஷ்முக், விவேக் ஓபராய்க்கு விளக்கி கூறி உள்ளார். விவேக்கிற்கு இந்த கதை பிடித்து விட்டதாம். இதனால் இப்படத்தில் நடிக்க விவேக் ஒப்புக் கொள்வார் என கூறப்படுகிறது. அவர் ஓகே சொன்னதும் படத்தின் வேலைகளை துவக்க உள்ளனராம். இந்த தகவல் உண்மை என்பதை விவேக்கே உறுதி செய்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ரிதிஷ் தான் எனக்கு இப்படத்தின் கதையை விளக்கினார். எனக்கு அது மிகவும் பிடித்திருந்தது. நான் நிறைய மராத்தி படங்கள் பார்த்துள்ளேன். அதில் பல நல்ல விஷயங்கள் இடம்பெற்றுள்ளன. இத்தகைய விஷயங்களை ஊக்குவிப்பது, ஒட்டுமொத்த இந்திய சினிமாவுக்கம் நல்லது. நான் எப்போதும் மராத்தி படங்களால் உள்ள அர்த்தமுள்ள கதைகள் மற்றும் உண்மையான கருத்துக்களால் ஈர்க்கப்பட்டவன் என்றார். விவேக் ஓபராய் தற்போது ராய் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விவேக் டான் வேடத்தில் நடித்துள்ளார்.