மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
ஷாரூக்கான் மற்றும் கரண் ஜோகர் தயாரிப்பில், கெளரி ஷிண்டே இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'டியர் ஜிந்தகி'. இப்படத்தில் ஆலியா பட் முதன்மையான ரோலில் நடித்திருக்கிறார். ஷாரூக்கானும் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த கெளரவ தோற்றத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்து ரிலீஸ்க்கான வேலைகள் நடந்து வரும் வேளையில், மற்றொருபுறம் படத்தின் புரொமோஷன் வேலைகளும் பிஸியாக நடந்து வருகிறது.
இதனிடையே டியர் ஜிந்தகி படத்தை சல்மான்கான் நடத்தி வரும் பிக்பாஸ் 10 நிகழ்ச்சியில் புரொமோஷன் செய்ய இருப்பதாக ஏற்கனவே செய்தி வெளியான நிலையில் இந்த புரொமோஷனில் ஷாரூக்கான் பங்கேற்க மாட்டார் என தெரிகிறது. டியர் ஜிந்தகி படத்தில் ஷாரூக்கானுக்கு படம் முழுக்க ரோல் கிடையாது. அதனால் இந்தப்படத்தின் புரொமோஷனில் அவர் பங்கேற்க மாட்டார் என்கிறார்கள். அதேசமயம், பிக்பாஸ் 10 நிகழ்ச்சியில் ஆலியா பட் பங்கேற்று டியர் ஜிந்தகி படத்தை புரொமோட் செய்ய உள்ளார்.
டியர் ஜிந்தகி படம் வருகிற நவ., 25-ம் தேதி ரிலீஸாக உள்ளது.