மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
நடிகை தீபிகா படுகோனே, தற்போது நடிகர் வின் டீசலுக்கு ஜோடியாக "ட்ரிபிள் எக்ஸ் தி ரிட்டன் ஆப் சாண்டர் கேஜ்" என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் 2017 ம் ஆண்டு ஜனவரி மாதம் ரிலீசாக உள்ளது. இவர் சமீபத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய போது, வின் டீசலை ஷாருக்கானுடன் ஒப்பிட்டு பேசினார். பேட்டியில் அவர் பேசுகையில், பாலிவுட்டிற்கு நடிக்க வந்த போது ஷாருக்கானும், பரத் கானும் எனக்கு எப்படி இருந்தனரோ அதே போல் வின் டீசலும் அவரது சகோதரி சமந்தாவும் எனக்கு. அமெரிக்காவில் இருந்த போது வின் டீசலும் அவரது சகோதரியும் எனது குடும்பத்தினரை போன்று என்னை பார்த்துக் கொண்டனர். நான் மிக எளிதாக உணர்ந்தேன். ஓம் சாந்தி ஓம் படத்தில் நடித்த போது ஷாருக்கானும், பரத் கானும் என்னை பார்த்துக் கொண்டதை போன்று என்னை பாதுகாப்பாக உணர செய்தனர் என்றார்.