'ராயன்' படத்திற்கு முன்பு 'குபேரா' டீசர்' | கோடை விடுமுறை வெளியீடுகள் ஆரம்பம் : மே 3ல் 5 படங்கள் ரிலீஸ் | ஸ்ருதிஹாசனின் இரண்டாவது காதல் பிரிவு? - காரணம் என்ன? | மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் |
பிரபல சமையல் கலை நிபுணர் சஞ்சீவ் கபூர். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், என்னுடைய வாழ்க்கையை படமாக்க பேசி வருகிறார்கள். ஆனால் என்னை பொறுத்தமட்டில் நான் இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும் என்று எண்ணுகிறேன், இன்னும் நிறைய சாதிக்க வேண்டும் என்று விரும்புகிறேன் என்றார். தொடர்ந்து அவரிடத்தில் ஒருவேளை உங்கள் வாழ்க்கை படமானால் அதில் யார் நடிக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள் என்று செய்தியாளர்கள் கேட்க, அதற்கு பதிலளித்த சஞ்சீவ், பாலிவுட் நிறைய திறமையான நடிகர்கள் இருக்கிறார்கள், என்னுடைய ரோலில் யார் வேண்டுமானாலும் நடிக்கலாம், ஆனால் என்னை பொறுத்தமட்டில் என்னுடைய சிறந்த நண்பரான அமீர்கான், எனது ரோலில் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்று கூறினார்.