மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாறு எம்.எஸ்.தோனி என்ற பெயரில் திரைப்படமாக ஹிந்தியில் தயாராகியுள்ளது. அதே பெயரில் தெலுங்கு மற்றும் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ள இத்திரைப்படத்தின் தெலுங்கு பாடல்கள் வெளியீட்டு விழா நாளை(செப்டம்பர் 24) ஐதராபாத்தில் நடைபெறவுள்ளது. இவ்விழாவில் தோனியுடன் பாகுபலி இயக்குனர் ராஜமௌலியும் கலந்து கொண்டு பாடல்களை வெளியிடவுள்ளார் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இயக்குனர் நீரஜ் இயக்கியுள்ள இப்படத்தை ஃபாக்ஸ்ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து அருண் பாண்டே தயாரித்துள்ளார். சுஷ்ஹாந்த் சிங், கியார அத்வானி மற்றும் பலர் நடித்துள்ள இத்திரைப்படம் ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு என மூன்று மொழிகளில் செப்டம்பர் 30ல் திரைக்கு வரவுள்ளது.