மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
டைரக்டர் கிரிஷ் மாலிக்கின் அடுத்த படமான தோர்பாஸ் படத்தில் நடிப்பதற்கு நடிகர் சஞ்சய் தத் ஒப்பந்தம் ஆகி உள்ளாராம். இப்படம் ஆப்கானிஸ்தானில் படமாக்கப்பட உள்ளதாம். சிறு குழந்தைகளுக்கு எவ்வாறு தற்கொலைப்படைகளாக பயிற்சி அளிக்கப்படுகிறது என்பதே இப்படத்தின் கதையாம். மூளை சலவை செய்யப்பட்ட குழந்தைகளை காப்பாற்றும் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரியாக இப்படத்தில் சஞ்சய் தத் நடிக்கிறாராம்.
இந்த தகவலை டைரக்டர் கிரிஷ் மாலிக்கும் உறுதி செய்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், நான் சஞ்சய் தத்தை சந்தித்து இந்த படத்தின் கதை அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. உடனடியாக இந்த படத்தில் நடிக்க தான் தயாராக இருப்பதாக கூறி விட்டார். சஞ்சய் தத், அதீத புத்திசாலிதனமும், அர்ப்பணிப்பு உணர்வும் கொண்ட நடிகர் என்றார். 2017ம் ஆண்டின் மத்தியில் தோர்பாஸ் படத்தின் வேலைகள் ஆரம்பமாக உள்ளது.