மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
பாலிவுட்டில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் பிராச்சி தேசாய், ஸ்ரத்தா கபூர் குறிப்பிடத்தக்கவர்கள். சமீபத்தில் அசார் படத்தில் நடித்த பிராச்சி, அடுத்தப்படியாக ‛ராக் ஆன் 2' படத்தில் ஸ்ரத்தாவுடன் இணைந்து நடிக்கிறார். பொதுவாக இரண்டு ஹீரோயின்கள் படங்கள் என்றாலே அந்த நடிகைகள் இடையே போட்டியிருக்கும். அதுபோன்று இவர்களுக்குள்ளும் போட்டி இருக்கிறதா என்று பிராச்சி தேசாயிடம் கேட்டால், அப்படியெல்லாம் இல்லை என்கிறார்.
இதுப்பற்றி அவர் கூறியிருப்பதாவது... ‛‛ராக் ஆன் படத்தில் பர்கான் அக்தர், அர்ஜூன் ராம்பால், புராப் கோலி ஆகிய மூன்று ஹீரோக்கள் நடித்தனர். இப்போது ராக் ஆன் 2வில் இந்த மூன்று பேருடன், நான்காவதாக சசாங்க் இணைந்துள்ளார். ஹீரோக்களே நான்கு பேர் இணைந்து ஒற்றுமையாக நடிக்கும்போது, ஹீரோயின்கள் நாங்கள் இரண்டு பேர் இணைந்து ஒற்றுமையாக நடிக்க மாட்டோமா.? எங்களுக்குள் எந்த போட்டியும் இல்லை. அவரவர் அவரின் ரோல்களில் சிறப்பாக நடிக்கிறோம். இதில் யாரையும், யாருடனும் ஒப்பிட வேண்டிய அவசியமில்லை'' என்று பிராச்சி தேசாய் கூறியிருக்கிறார்.