மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
பாலிவுட்டில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்தவர் அமீர் கான். தற்போது அமீர் கான், டங்கல் என்ற படத்தில் மல்யுத்த வீரர் போகத்தாக நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து அமீர் கான், இயக்குநர் விஜய் கிருஷ்ணா ஆச்சார்யா இயக்கத்தில் "தக் ஆப் இந்துஸ்தான் " படத்தில் நடிக்கிறார். ஆதித்யா சோப்ரா தயாரிக்கிறார். படத்தில் அமீர்கானுடன் பிரபல நடிகர் அமிதாப் பச்சனும் நடிக்க இருக்கிறார். தற்போது தக் படத்தின் ரிலீஸ் தேதியை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் அமீர் கான். கூடவே அமிதாப் உடன் நடிக்கும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.
இதைப்பற்றி அமீர் கான் டுவிட்டரில் கூறியதாவது..."அமிதாப் பச்சனுடன் நடிக்க வேண்டும் என்ற நீண்ட நாள் ஆசை தற்போது தான் நிறைவேறியிருக்கிறது. என் வாழ்கையில் யாரை ரசித்தேனோ, அவருடனே நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. படப்பிடிப்பு அடுத்த ஆண்டு துவங்க இருக்கிறது. 2018 ஆம் ஆண்டு தீபாவளிக்கு படம் வெளியாகும். படப்பிடிப்பு துவங்கும் நாளை எண்ணி ஆவலாய் உள்ளேன்" என்று கூறியுள்ளார்.